Posts

இதற்கு முந்தய பதிவினை பதிவிட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. என்னால் நம்பவே முடியல... வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்னு தெரியல... குடும்பத்துடன் ஒன்றிய இந்த வாழக்கையில் நாம் நினைப்பதொன்றும் நடக்காதென்பது என் கருத்து. இப்படி செய்யலாம் என்று ஒரு முடிவெடுத்தால் காலம் என்னை வேறொரு திசையில் பயணிக்க செய்கிறது. எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது அது " என் கை நடுக்கமுறும் முன்பே நான் விரும்பிய DSLR CAMERA " வை வாங்கி விடுவதென்பது . வயது போய்க்கொண்டே இருக்கிறது...
மீண்டும் எழுதலாம்னு நினைக்கிறன் .... காலம் கனிந்துள்ளதாய் உணர்கிறேன், எழுதுவதற்கு என்ன இருக்குனு கேட்கவே வேண்டாம் இடியாப்ப சிக்கலாகிப் போன என் நாடும் என் தமிழ் தேசமும் நாசமாகிக் கொண்டிருப்பதை கண்கூடாய் பார்க்க முடிகிறது. கருத்துக்களை தெரிவித்தும் பயனொன்றும் இல்லை. பறவைகளின் மாலை நேர சத்தங்கள் போல எல்லாம் புரிந்தும்  புரியாமலும். நடக்கின்ற நாடகத்திற்கு விமர்சனம் எழுதியாயிற்று என்று ஒரு சாரார் போதுமென்றும்.. நானும் நடிக்கிறேன் என்று ஒரு கூட்டமும், உண்மையான போராளியின் போராட்டங்களுக்கு  அடக்குமுறையை கட்டவிழ்த்த இனத்தின் எதிரிகளும் இங்குதான் இங்கேதான் ... என் கண் இதனை பார்த்தும் பார்க்காமலும் .... 
Image
மனித அழுக்கு படியாத கரை....
Image
செயற்கையும் ஒரு அழகுதான்... இருள் சூழ்ந்த பொழுது... இது சூரியன் உதிக்கும் அதிகாலை பொழுது.... வர்ணங்களை வர்ணிக்க வார்த்தை இல்லை என்னிடம்...
Image
சுயம்....
Image
வண்ணமயம்....
Image
இந்த படம் நல்ல இருக்கா?