மீண்டும் எழுதலாம்னு நினைக்கிறன் .... காலம் கனிந்துள்ளதாய் உணர்கிறேன், எழுதுவதற்கு என்ன இருக்குனு கேட்கவே வேண்டாம் இடியாப்ப சிக்கலாகிப் போன என் நாடும் என் தமிழ் தேசமும் நாசமாகிக் கொண்டிருப்பதை கண்கூடாய் பார்க்க முடிகிறது. கருத்துக்களை தெரிவித்தும் பயனொன்றும் இல்லை. பறவைகளின் மாலை நேர சத்தங்கள் போல எல்லாம் புரிந்தும் புரியாமலும். நடக்கின்ற நாடகத்திற்கு விமர்சனம் எழுதியாயிற்று என்று ஒரு சாரார் போதுமென்றும்.. நானும் நடிக்கிறேன் என்று ஒரு கூட்டமும், உண்மையான போராளியின் போராட்டங்களுக்கு அடக்குமுறையை கட்டவிழ்த்த இனத்தின் எதிரிகளும் இங்குதான் இங்கேதான் ... என் கண் இதனை பார்த்தும் பார்க்காமலும் ....
Posts
Showing posts from June, 2017